ஆதி அணைஞ்ச பெருமாள் நாடார் வம்ச வரலாறு
முன்னுரை
1933ம் வருடத்தில் பெருநாளி ஸ்ரீ ஆ.குமரய்யா நாடாரும் தூத்துக்குடி ஸ்ரீ அ.சி.வாலசுப்பிரமணிய நாடாரும் சேர்ந்து தயார் செய்த கருணையானந்தர் சரித்திரம் கையெழுத்துப் பிரதியனின்று 'ஆதி அணைஞ்ச பெருமாள் நாடார் வம்ச' வரலாறு எடுக்கப்பட்டது. இச்சரித்திரம் இம்மகானைப் பற்றிக் கூறுவதுடன் ஆதி அணைஞ்ச பெருமாள் நாடார் வம்ச வரலாற்றைப் பற்றியும் கூறுகிறுது. 1960ல் இருந்த சுமார் 72 தலைக்கட்டுகள் கொண்ட அணைஞ்ச பெருமாள் நாடார் வம்சவகையறா ஒவ்வொரும் தலைக்கட்டும் எவ்வழியைச்சேர்ந்தது என்று அறிவதற்கு இச்சரித்திரம் உதவி புரிகின்றது அதன் வழி கொண்டு தற்சமயம் உள்ள 245 தலைக்கட்டுகள் வம்சாவழியுடன் தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது தவறு இருந்தாலோ, திருத்தம் இருந்தாலோ சேர்க்க வேண்டியது இருந்தாலோ திரு.T.K.P.கந்தசாமி, 26, நாடார் உறவின்முறை பேட்டை, தேனி ரோடு, உசிலம்பட்டி - 625532. (செல்: 9943899254) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
18-19வது நூற்றாண்டுகளில் பாண்டிய நாட்டில் நாடார்கள் இருந்து வந்து நிலையை அறிவதற்கும் இந்நூல் ஒரு சாதனமாகும். சிவகாசி, சாலிச்சந்தை, விருதுநகர் நாடார்கள் செய்து வந்துள்ள வணிகத்திறம், காட்டியவீரச்செயல், மற்ற ஜமீன் பாளையப்பட்டுகளிடம் இருந்துள்ள சம்பந்தம், திருப்பரங்குன்றம் ஆலயத்தில் செய்த ஆலய திருப்பணி ஆகியவற்றை இந்நூலில் காணலாம். கொற்கையைத் தலைமையாகக் கொண்ட திருவழுதி நாடு அல்லது திருவடி ராஜ்யம், மைக்கண் நாடான் குடியிருப்பு என்னும் கிராமத்தில் இருந்து வந்து சிவகாசி, மங்கல்ரேவு, பேரையூர், சாலிச்சந்தை முதலிய இடங்களில் இருந்து வந்த ஒரு நாடார் மரபைப் பற்றிய இது பேசுவதாயிருக்கும் இதனிற் கூறியுள்ள பெரியமுத்து நாடார் கல்வி, செல்வம், ஈகை, நீதி, தீரம் முதலியவைகள் வாய்க்கப்பெற்று பேரையூர் ஜமீன்தார் அவர்கள் ஆதரவில் அமர்ந்து ஒரு சிற்றரசரைப் போல் விளங்கி வந்தவராவர் இவர் குமாரரே கருணையானந்த சுவாமிகள். இவர் தந்தை அடைந்த பாக்கியங்களுடன் விசேஷமாய் ஞானபாக்கியத்தை அடைந்த ஓர் இல்லற ஞானி பெரியோர்கள் உபசரிப்பு விசேஷமாய் ஞானபாக்கியத்தை அடைந்த ஒரு இல்லற ஞானி, பெரியோர்கள் உபசரிப்பு, தாய் தந்தை வாக்கிய பரிபாலனம், தெய்வ பக்தி முதலியவைகள் இவரிடம் நன்கு அமைந்திருந்தன. இவர் சுமார் 125 வருடங்களுக்கு முன் அடங்கியுள்ள ஆலயச் சமாதி இன்றும் மகத்துவம் கொண்டுள்ளது.
ஆதி அணைஞ்ச பெருமாள் நாடார் வம்ச வரலாறு மைக்கண் நாடான் குடியிருப்பு
கி.பி. 1324 - 1333 வருடங்களில் டில்லியை ஆண்ட முகமதிய அரசர்கள் படையெடுப்பு, சேர, சோழ, பாண்டிய ராஜ்யங்களில் மிக்க கோரத்தை விளைவித்தது. பாண்டிய நாடுகளில் மதுரை கொற்கையில் உள்ள தலைமையரசுகள் ஒழிந்து சிற்றரசர்களாகவே நிரம்பியிருந்தன. இம்முறையில் தாமிரவருணி நதி கடல் சங்கமத்தை அடுத்த இடங்களான கொற்கை, காயல், குரும்பூர், மாவிடுபண்ணை , ஜயதுங்க நல்லூர் முதலிய நகரங்களில் இருந்து ஆட்சி செய்த அக்ரபாண்டியன், வீரபாண்டியன், வங்கி பாண்டியன், திருவழுதி நாடான், ஜயதுங்க பாண்டியன் ஆகிய பஞ்ச பாண்டியர்கள் அல்லது பஞ்சவழுதி நாடார்கள் ஆட்சி செய்திருந்தனர். கி.பி. 1560-ல் விஜய நகரத்து அரசர் உத்தரவுப்படி வந்த விசுவநாத நாயக்கருடன் நடத்திய கயத்தாறு யுத்தத்தில் ஐவரில் ஒருவனாகிய அக்ரபாண்டியன் வெட்டுண்டு போக மற்ற நால்வரும் அவ்விடம் நாட்டிய கல்லின் எழுத்து உடன்படிக்கையின்படி தாம் ஆண்டு வந்த ராஜ்யங்களை விடுத்து நாஞ்சி நாடு சென்று விட்டனர். அக்காலம் பாண்டிய மரபினர் என்று கூறப்படும் நாடார்கள் கிராமங்களின் மேற்பார்வை. சைன்ய சேவை முதலியவற்றில் இருந்தவர்கள். அவர்கள் பல தொழில்களையும் கைக்கொண்டு பல திசைகளிலும் செல்லலாயினர்.சிலர் தங்கள் பெயர்ப்படி பல கிராமங்களை அமைத்து நிலச்சுவான்தார்களாக இருந்து வந்தனர். அவ்விதம் அமைக்கப்பட்ட ஊர்களில் மைக்கண் நாடான் குடியிருப்பு என்பதும் ஒன்றாகும்.
மைக்கண் நாடான் குடியிருப்பு என்னும் கிராமம் தற்போது உள்ள குரும்பூர், நல்லூராகிய கிராமங்களுக்கு வடகிழக்கு திசையில் சுமார் ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது. தாமிரபரணி நதிக்கால்கள் பாய்ந்து வாழை, தென்னை , மா, பனை முதலியன நல்ல பலனைக் கொடுப்பதாகவும், வருடத்தில் இருபோகம், முப்போகம் நெல்விளையப் பெறுவதான கழனிகளும் சிறந்திருக்கின்றன. வெற்றிலைக் கொடிக்கால்களும் அங்கு நிலவியிருக்கின்றன. முன் சொல்லியப்படி குரும்பூர் பாண்டியர் சிற்றரசுப் பாத்தியம் எடுபட்டுப் போனபின் குரும்பூர் பாண்டியர் மரபில் உள்ளமைக்கண் நாடான் என்னும் ஒரு பிரபல குடும்பஸ்தனால் அவ்வூர் அமையப் பெற்றதாக யூகிக்கலாம். தற்போது நாடார் பழங்குடிகள் அங்கு குடியிருந்து வருகின்றனர்.
குமாரசாமி நாடார்
மைக்கண் நாடான்குடியிருப்பு என்னும் ஊரில் சுமார் 300 வருடங்களுக்கு முன்னதாக குமாரசாமி நாடார் என்பவர் ஒருவர் பிரபலமானவர். இவர் குலதெய்வம் அணைஞ்சபெருமாள் ஐயன் என்று கூறப்படுகிறது. இந்த ஐயன் நிலையம்மைக்கண் நாடான் குடியிருப்பு பக்கமுள்ளது. குமாரசாமி நாடார் வியாபாரத்துறையில் இறங்கி தூர இடங்கள் சென்று வருவதான பொதி எருது வர்த்தக நாடார் மரபினராகவே தெரிகின்றது. இப்பக்கமுள்ள நாடார்கள் தொன்று தொட்டு நிலச்சுவான்தாரர்களாகவும், காலத்திற்கேற்றபடியான வணிகத் துறையில் உள்ளவர்களாகவும் ஏழைகள் தாலதென்னை விருக்ஷங்கள் பரிபாலர்களாகவும் இருந்து வந்திருக்கின்றனர். சிலம்பத் தொழில் அவர்கள் கட்டாய தொழிலாய் இருந்தமையால், கேரளம் முதல் சென்னைப் பட்டணம் வரை, போய் திரும்புகிற பொதி எருது வர்த்தக யாத்திரைக்கு அவர்கள் அஞ்சுவதில்லை. அவ்வித பொதி எருது வர்த்தகத்தையே பிரதானமாகக் கொண்டிருந்த குமாரசாமி நாடார் தான் இருக்கும் ஊர் வியாபாரத்திற்குப் போதுமான செளகர்யம் இல்லாததால் இதற்குமுன் தான் போய் வந்திருந்த நகர்களில் ஒன்றாகி சிவகாசிக்கு குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்.
சிவகாசி
சிவகாசி பூர்விக நாடார்களாலும் இடையில் வந்து சேர்ந்த நாடார்களாலும் நிரம்பப் பெற்று நாடார் ஆறூர் உறவின் முறையூர்களில் ஒன்றாய் இருந்து வந்தது. அப்பொழுதே நாடார்கள் நல்ல செல்வந்தர்களாகவும், செல்வாக்குடையவர்களாகவும், சிவகாசியில் இருந்து வந்திருக்கின்றனர். தென்னாட்டில் இருந்து குடும்ப சகிதம் வந்த குமாரசாமி நாடார் சிவகாசி அம்மன் கோவில் பட்டித்தெருவில் இல்லம் எடுத்து அமர்ந்ததாகக் தெரிகிறது. இக்காலம் சுமார் கி.பி. 1700 ஆக நிதானிக்கலாம். சிவகாசி வந்து சேர்ந்த குமாரசாமி நாடாரின் மகன் சங்கிலி நாடாரும் தந்தையின்கை தவியாய் இருந்து பொதி எருது வர்த்தகத்துடன் தோட்ட விவசாயத்தையும் கவனித்து வந்தார். இவர் முயற்சியால் வியாபார ஆதாயமும் தோட்ட விளைப்பொருள்கள் மிகுதியும் சேர்ந்து க்ஷேமமான குடித்தனமாக்கிவிட்டது. சங்கிலி நாடார் தனது மனைவியுடன் இல்லறம் நடத்தி வரும் நாளில் அவரது மனைவி கருவுற்று ஒரு திருமகனைப் பெற்றார். பையனுக்கு ஜாதகம் பார்த்ததில் ஜாதகன் யோகசாலியாய் இருப்பான் என்றும் ஆனால் தகப்பன் உயிருக்கு ஆபத்து என்றும் தெரிய வந்தது. ஆகையால் சங்கிலி நாடார் மனம் நொந்து சிவகாசியை விட்டு நீங்கி, வடபுறம் சென்று பேரையூர்க்கு கீழ்புரம் முத்துலிங்கபுரம் சின்னாரெட்டியபட்டி நாயக்கர், ரெட்டியார் ஆதரவில் விவசாயம் செய்து ஜீவித்து அந்தியமானதாகக் கூறப்படுகிறது.
அணைஞ்ச பெருமாள் நாடார்
சங்கிலி நாடார் சிவகாசியிலிருந்து போனபின் அவர் மனைவி, கணவன் பிரிவைச் சிந்திக்காமல், புத்திர வாஞ்சையினால் அழகிய மகனை கண்டுகளித்து, கணவன் மாமன் தோட்ட நில வரவைக் கொண்டு காலம் கழிக்கலானார். அப்பாலகனுக்கு அணைஞ்ச பெருமாள் என்ற தம் குலதெய்வப் பெயரை இட்டாள். பாலகன் கற்கத் தக்கவைகளைக் கற்று வாலிப தசை அடைந்தார். அக்காலம் சிவகாசியில் தெப்பக்குளம் கட்டிய செண்பகக்குட்டிய நாடார் மரபில் அய்யநாடார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திரண்ட சம்பத்து வாய்த்து மிக்க செல்வாக்குடன் ஓர் சிற்றரசு போல் விளங்கி வந்தார். நாட்டாண்மை ராம நாடார் குடும்பமும் இத்தகையதே. அய்ய நாடாரிடம் நமது அணைஞ்ச பெருமாள் நாடார் சேர்ந்து விவசாயம், வியாபாரம் முதலிய தொழில்களில் மேற்பார்வையாளராக இருந்து வந்தார். மேற்கூரிய இரு பிரபல குடும்பங்களும் கொல்லபட்டி, சேத்தூர், சிவகிரி கொல்லிக்கொண்டான், தும்பிச்ச நாயக்கனூர் முதலிய ஜமீன்களிடம் இம்சைப்பட்டு சகிக்க முடியாமல் வெளிவரும் நாடார் குடும்பங்களை ஆதரித்து வந்தனர். அணைஞ்ச பெருமாள் நாடார் தென்னாட்டு வழக்கப்படி சிறு வயதில் சிலம்புத் தொழில் கற்றுக் கொண்டபடியால் படைவீரரில் ஒருவராகக் சேர்ந்து அய்யநாடாருடன் பல இடங்கள் போய் வருவதுமின்றி அவருக்குச் சிறந்த மெய்க்காப்பாளராகவும் இருந்து வந்தார்.
திருமணம் - மைந்தர்கள் தோற்றம்
- இவ்விதம் அணைஞ்ச பெருமாள் நாடார் அய்யநாடாரிடம் தொழில் பார்த்து வருங்காலத்தில் அவ்வூரில் ஒரு தனவந்தரின் புதல்வியாய் விளங்கிய விசாலாக்ஷி என்னும் மாது சிரோண்மணியை மணமுடித்தனர். அய்ய நாடார் உதவியை சம்பூர்ணமாகப் பெற்று வியாபாரத்திலும், தோட்ட விவசாயங்களிலும் விருத்தி அடைந்தனர். இவர் விசாலாக்ஷியுடன் இல்லறம் நடத்தி வரும் நாளில் பெரியமுத்து நாடார், அய்யம் பெருமாள் நாடார், மாரிமுத்து நாடார். ராமநாத நாடார், சுப்பய நாடார், காளியப்ப நாடார், சங்கர நாடார் என்னும்7மைந்தரைப்பெற்றனர். இவர் மைந்தரைப்
பெற்று வயோதிகமாய் இருந்த காலம் சுமார் 1760-70 ஆக இருக்கலாம். இதற்குள் சிவகாசி அம்மன்புரம் மாரியம்மன் கோவில் பல திருப்பணித் தொண்டுகளும் செய்திருக்கிறதாய்த் தெரிகிறது. மாரியம்மன் கோவில் தூண் வரிசைகளில் அமைத்து வைத்துள்ள சதிபதி விம்பங்களில் அணைஞ்ச பெருமாள் நாடார் விசாலாக்ஷியம்மாள் ஆகிய இவர்களின் சிலாபங்களும் காணப்படும். அய்ய நாடார் அணைஞ்சபெருமாள் நாடார் இவர்கள் காலங்களில் நாட்டில் கலகங்களும், கொள்ளைகளும் நடந்த வண்ணமாகவே இருந்து வந்தன. அணைஞ்ச பெருமாள் நாடார் தோட்ட நிலங்கள், குடும்பத்திற்குப் போதுமான நகைகள், பொன், செம்பு, நாணயங்கள் நிரம்பப் பெற்று நல்வாழ்வு நடத்திக் கொண்டு வந்தனர்.
பெரியமுத்து நாடார்
அணைஞ்ச பெருமாள் நாடாரின் சிரேஷ்டகுமார் பெரியமுத்து நாடாராவர். இவர் ஜனன காலம் கி.பி. 1745 ஆக இருக்கலாம் என்று நிதானிக்கப்படுகிறத. இவர் தந்தை காலம் சென்ற பின்பு சகோதருடன் வியாபாரம், விவசாயம் முதலிய தொழில்களைச் செவ்வனே நடத்தி வந்தனர். அய்யநாடாரிடம் தந்தை பார்த்து வந்த தொழில்களில் ஒன்றாகிய கணக்கு வேலை பார்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. தம்பிமார்கள் பாட சாலைகளில் படித்தும் வியாபார ஸ்தலங்களில் பழகியும் வளர்ந்து வந்தார். பெரிய முத்து நாடார் சிவகாசியில் ஒரு தனவானின் புதல்வி கருப்பாயி எனும் கன்னிகையை திருமணம் முடித்து வாழ்ந்து வந்தனர். அப்போது அய்ய நாடார் வயோதிகமானபடியால் செல்வாக்கு சிறிது குறைவுபட்டு சுற்றுக் கிராமங்களில் உள்ளவர்கள் கூட்டமாகத் திரண்டு சிவகாசி ஊரைக் கொள்ளையிடவந்தனர். ஜனங்கள் அச்சத்தால் நகை, நாணயங்களைப் பத்திரப்படுத்தினவரும், பத்திரப்படுத்தாதவருமாக இருக்கப் பட்டணம் கொள்ளையிடப்பட்டது. பெரிய முத்து நாடார் வீட்டில் சேகரமாயுள்ள தவசதானியம், ரொக்க நாணயங்கள் எல்லாம் போன போதிலும் தங்கம், வெள்ளி நகைகள் வீட்டில் புதைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டன. ஆனால் பெரியமுத்து நாடாரின் மாமன், மைத்துனர் அவைகளை நயவஞ்சகமாய் அபகரித்துச் சென்றனர்.பெரியமுத்து நாடார் தனக்கு இது விஷயத்தில் உதவி அவ்விடத்தில் இல்லாததால் சிவகாசியில் இருக்க மனம் பொருந்தாமல் வெறுப்புத் தோன்றி மனைவி சகோதரருடன் பாவாலி வந்து சேர்ந்தார்.
பாவாலி, மங்கல்ரேவு.
விருதுநகரில் உள்ள பெரும்பாலான நாடார்கள் பாவாலியில் இருந்தே வந்ததாகச் சொல்கின்றனர். பெரியமுத்து நாடார் தன் சகோதரருடன் பாவாலியில் தன் பாட்டனார் சங்கிலி நாடார் சம்பாத்தியத்தில் ஏற்பட்டு தன் தகப்பனார் அணைஞ்ச பெருமாள் நாடார் ஏவல் பரிபாலனத்தில் இருந்து வந்ததான தோட்ட நிலங்களில் விவசாயம் செய்திருந்தனர். போதிய வருமானம் இல்லாததால் மங்கல்ரேவு என்னும் ஊர் வந்து சேர்ந்தார். மங்கல்ரேவில் ஒரு யோகி புருடனின் தரிசனம் கிடைத்தது. அவருடைய ஆசீர்வாதத்தால் வர்த்தகம் பெருமளவில் பெருகியது. சாப்டூர் ஜமீன்
அக்காலத்தில் சாப்டூர் ஜமீன் கம்பள நாயக்கர்களில் ஒருவர் காமய நாயக்கர் என்ற பட்டமுடன் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அந்த ஆட்சிக்கு உட்பட்டதே மங்கல்ரேவு என்ற கிராமம், பெரியமுத்து நாடார் பொதி வர்த்தகத்தால் திரண்ட செல்வராயினர். ஜனங்கள் பொன், வெள்ளி நாணயங்கள் மிகுதியாகக் கண்டிராத அக்காலத்தில் இவர் திரவிய சம்பன்னராயிருக்குஞ் செய்தி ஜமீன்தார் வரை எட்டியது. அப்போதே சாப்டூரில்
கூட்டங்கள் கூடுவதான செய்திகள் பெரியமுத்து நாடாருக்கு வந்து கொண்டே இருந்தன. பின்பு மங்கல்ரேவு பெத்தண சுவாமி முன் கூட்டம் கூடியதாகவும், அக்கூட்டத்தில் பெரியமுத்து நாடார் வீட்டைக் கொள்ளையிட வேண்டும் என்று பேசுவதாகவும் | தெரியவந்தது. பெரியமுத்து நாடார் முன் எச்சரிக்கையாய் இருந்தபடியால் அன்றிரவே கொள்ளைக் கூட்டத்தார் வருமுன்பே தம்பிமார்களுடன் சுறுசுறுப்பாய் வீட்டில் உள்ள சாமான்களை எல்லாம் கட்டி ஆறு பொதிமாடுகளில் ஏற்றிக்கொண்டு வீட்டில் விளக்கை ஏற்றிவைத்துவிட்டு அரவமில்லாமல் சுமார் 3மைல் தூரத்தில் இருக்கிற பேரையூர் ஜமீன் போய்ச்சேர்ந்தார். கொள்கைக் கூட்டத்தார் கொள்ளையில் ஒன்றும் அகப்படாமல், நாடார் குடும்ப சகிதம் அசையும் பொருள்களுடன் பேரையூர் போய் விட்டாரென்று தெரிந்து ஒன்றும் செய்வதற்கின்றி ஏமாந்து போய் விட்டனர்.
பேரையூர்
பேரையுரைத் தலைநகராகக் கொண்டு பல கிராமங்களை ஆட்சி செய்து வருபவர் தும்பிச்சி நாயக்கரென்னும் ஜமீன்தார். இவர் ஜமீன்தார் வரிசைகளில் மிக்க புகழ் வாய்ந்து பல வித்துவான்கள் பாடல்கள் பெற்றவராவார். ஜமீன்தார், பெரியமுத்து நாடார் வந்து சேர்ந்த விபரங்களை அறிந்து மிக்க தயவுடன் ஆதரித்து அவர் செய்து வருகிற வியாபார வசதிக்காக அரண்மனை வடபக்கமாயுள்ள நிலத்தில் பேட்டை கட்டிக் கொள்ளும்படியாகவும், அதனைச் சந்ததி பரம்பரையாக அனுபவித்துக் கொள்ளும்படியாகவும் அனுமதி தந்தனர். பெரிய முத்து நாடார் அரண்மனையை ஒட்டிய இடத்தில் சுற்றி மதில் வளைத்து கட்டிடங்கள் கட்டி பஞ்சுப்புரை, ஜவுளிக்கடை, பலசரக்கு கடை, நவதானியக் கடை முதலியவைகளைவைத்து பல சிப்பந்தி ஆட்களையும் அமர்த்தி வியாபாரத்தை மிகு பிரபலமாய்ச் செய்து வந்தனர். இது காலம் கி.பி. 1780 ஆக இருக்கலாம். பெரியமுத்து நாடார் தாம் செய்து வருகிற வியாபார விருத்திகளால் ஆதாயங்கள் மிகுந்து ஆடு, மாடு, தானிய, நாணய சம்பத்துக்கள் பெருகி ஜமீன்தாரிடம் மிக நேசமாயிருந்து வந்தனர். ஒரு நாள் ஜமீன்தாரை சந்தித்து பேசிக் கொண்டிருக்கும்போது "தற்காலம் மதுரைச் சீமைப் பாளையப்பட்டுகள், ஜமீன்கள் ஒன்றுக்கொன்று பகைத்து அடிக்கடி கொள்ளை போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. என போன்ற குடிகள் ஜமீன் கிராமங்களில் தங்கியிருப்பது ஆபத்தாகவே தோன்றுகிறது. நமது பேரையூருக்கு கீழப்பக்கமாக உள்ள கிராமங்கள் மதுரைச் சீமை ஆட்சித் துரைத்தனத்தார் நேர் பார்வையில் இருந்து வருகின்றன. அவ்விடத்தில் எனது குடியிருப்பை வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இதற்கு சமஸ்தான உத்தரவை எதிர்ப்பார்க்கிறேன்" என்றார். ஜமீன்தார் அது சரியான யோசனை என்றும் அங்கு குடியிருந்து கொண்டு பேரையூரில் வியாபாரத்தை நடத்தி வரலாம் என்றார். பெரியமுத்து நாடார் உடனே மதுரை போய் சீமை ஆட்சி செய்து வந்த மல்லாரி ராவ் முதலியோரைப் பார்த்து அனுமதி பெற்று சாலியூர் வந்து ஏழு வீடுகள் எடுத்து தம்பிமாருடன் குடியமர்ந்து வாழ்ந்து வந்தனர். சாலியூர் (சாலிச்சந்தை)
பெரியமுத்து நாடார் சாலியூரிலும் வியாபாரம் செய்து வந்தமையால் சுற்றியுள்ள ஊர் ஜனங்கள் வந்து பண்டமாற்றல்' என்னும் முறையில் தம்தம் விளைபொருட்களைக் கொடுத்து மற்றப் பொருட்களை வாங்கிப் போகின்ற வழக்க மிகுதியால் அவ்வூரில் ஒரு சந்தையும் கூடலாயிற்று அதனால் 'சாலிச்சந்தை' என்ற பெயர் உண்டானதாகச் சொல்வார்கள். பெரியமுத்து நாடார் பேரையூரிலும், சாலிச்சந்தையிலும் பஞ்சு அரவைகள் நடத்தி பஞ்சுகளை பொதி போட்டும், நூல்களை வாங்கியும், பொதி எருதுகளில் ஏற்றி நீண்ட
தூரங்கள் சென்று விற்று வருகிறதும் உண்டு. இவ்வாறான பிரயாணங்களில் தங்கி வர்த்தகம் நடத்தி வந்த இடங்களில் அம்மாபேட்டை என்பதும் ஒன்று. அம்மாபேட்டை
தஞ்சாவூர் சீமையில் உள்ளது. அக்காலம் பாண்டிய நாட்டு வியாபாரிகள் சென்று கொண்டு விற்று வருவதான முக்கிய வியாபார ஸ்தலமாய் அது இருந்து வந்திருக்கின்றது. தென்னாட்டில் உள்ள சாத்தங்குடி, திருமங்கலம், விருதுநகர், சிவகாசி, பாளையம்பட்டி, ஆகிய ஊர்களிலும் மற்ற ஊர்களிலும் உள்ள நாடார்கள் சென்று வியாபாரம் செய்வார்கள். இதில் பெரியமுத்து நாடார் தம்பி சங்கரநாடார் முதன்மையாக விளங்குவார். அவ்விடத்தில் இவர் முயற்சியால் கட்டப்பட்ட பேட்டை 'சங்கர நாடார் பேட்டை' என்றே விளங்கி வந்திருக்கின்றது.
கொள்ளைகள்
இவ்விதம் வியாபாரங்கள் நடந்து வரும் காலத்தில் தென்பாகத்தில் உள்ள சிற்சில ஜமீன்படைகள் திரண்டு பல கிராமங்களைக் கொள்ளையிடலாயின. நாலாயிரம், ஐயாயிரம் ஜனங்கள் சேர்ந்த அக்கூட்டம் பல ஊர்களைக் கொள்ளையிட்டு பேரையூரும் கொள்ளை போவதாகவே தெரிந்தது. ஜமீனிடம் அப்படைகளை எதிர்ப்பதற்கு போதுமான படைகள் இல்லை . ஜமீன்தார் பெரியமுத்து நாடாரிடம் கலந்து ஆலோசித்ததில் பெரியமுத்து நாடார், "நாம் இருக்கும் கிராமம் மதுரை துரைத்தனத்தார் ஆட்சியில் இருக்கின்றது. அங்கு யாதும் நேர்ந்தால் கேள்விக்கு வரும் தங்கள் படை பலங்களைக் கொண்டு நானும் எதிர்க்கின்றேன். அரண்மனையில் உள்ள அசையும் பொருள் அனைத்தும் சாலிச்சந்தை எனது மனை போய்ச் சேர வேண்டும்” என்றார். ஜமீன்தார் அதற்கு இசைந்து உடனே பொதி எருதுகள், வண்டிகள், ஆட்கள் மூலமாக பொருட்கள் சாலிச்சந்தை போய்ச் சேர்ந்தன. ஜமீன் படைவீரர்களும் சாலிச்சந்தை காவலிலேயே நின்றனர். பேரையூர் கொள்ளை போய் விட்டது. பின்பு சாலிச்சந்தை வந்துகொள்ளைக் கூட்டத்தார் வளைத்தபோது பெரியமுத்து நாடார் அஞ்சாநெஞ்சராய் ஜமீன்படைதாரருடன் தன் கீழுள்ள வீரர்களையும் சேர்த்துக் கொண்டு எதிர்த்தனர். போர் பலமாக நடந்தது. ஊரில் புகுந்த கொள்ளைக்காரர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். பெரியமுத்து நாடார் கொள்ளைக் கூட்டத்தலைவரிடம் சென்று "நீங்கள் சாலிச்சந்தையை கொள்ளையிட நினைக்கின்றீர்கள். இது ஜமீன் கிராமம் அல்ல. மதுரை துரைத்தனத்தார் மேற்பார்வையில் இருக்கப்பட்டதாகும். உடனே செய்தி விடுத்து நவாப் பாளையத்தை வரும்படி செய்வேன்” என்றார். அவர்கள் யோசித்து, கொள்ளைத் தலைமை தங்கள் ஜமீனைப் பொறுத்திருப்பதால் ஜமீனுக்கு மோசம் வந்தாலும் வரும் என்று அஞ்சி போய் விட்டனர். துரைத்தனத்தின் கீழ் வேலை பார்க்கும் கிராம உத்யோகஸ்தர்கள் மூலமாய் பெரியமுத்து நாடார் பிரஸ்தாபம் மதுரை அதிகாரிகளுக்கு எட்டி அவர்களே விரும்பி அழைத்து அவர்களைக் கண்டு பேசுதலாகிய போக்குவரவு இவருக்கு இருந்தமையால் கொள்ளைத் தலைவர்களை எதிர்த்துப் பேசம் ஆற்றல் பெரியமுத்து நாடாருக்கு இந்தது. வந்தது சாலிச்சந்தையில் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட பொருட்கள் எல்லாம் அரண்மனை போய்ச் சேர்ந்தன. உத்தமகுண வள்ளலான ஜமீன்தார் பெரியமுத்து நாடாரின் ஊக்கத்தையும், புத்திக் கூர்மையையும் கண்டு வெகுவாய் புகழ்ந்து அரண்மனை மந்திரிபோல் யோசனைகளுக்கு உரியவர்களில் ஒருவராக வைத்துக் கொண்டார். பல்லாக்கு, குதிரை, வாகனங்களில் பயணப் போக்குவரத்து செய்யும்படியான மரியாதைகளும் கொடுத்தனர்.
சிவராம சுவாமக் குருக்கள்
தென்னிந்தியாவின் சைவ மதத் தலைவராகிய லோக்குரு எனப்பட்ட சிருங்கேரி மடத்து ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் நாடார் குலத்தவரையும் தமது ஆதீனத்துக்கு உள்ளாக்க வேண்டி தமது சீடர்களில் ஒருவரான மைசூர் சமஸ்தானம் தாராபுரம் தாலுகா குளைஞ்சிவாடி கெற்கேசுர அக்கிரகாரம் ஸ்ரீ மடத்தில் இருந்த சிவசுவாமி சாஸ்திரியாரின் பௌத்திரர் சிவராம சுவாமி சாஸ்திரியாரை பாண்டியகுலமாயும் சிவகோத்திர சம்பன்னாளாயும் பாண்டிய தேசத்தில் பிறந்தவரையும், க்ஷத்திரயவம்சாளாயும் இருக்கிற நாடார் குல சமூகத்திற்கு குலகுருவாய் நியமனம் செய்தார். இவ்விதம் நியமனம் செய்யப்பட்ட குருக்களிடம் உபதேசம் பெற்றுக் கொண்ட நாடார்களில் பெரியமுத்து நாடாரும் ஒருவராவார். சிவராமசுவாமி சாஸ்திரியார் பெரியமுத்து நாடாரிடம் மிக நண்பராயிருப்பர். பெரியமுத்து நாடார் குருக்கள் அல்லது அவர் சந்ததியாய் உள்ளவருக்கு நூறு ஆயிரக்கணக்கான பொன், வெள்ளி நாயணங்கள், கொடுக்கல் வாங்கல் செய்து பிற்காலம் கடன் தொகையாய் இருந்ததாகவும் சொல்வார்கள்.
திருப்பரங்குன்றம்
- மதுரைக்கு அடுத்த தென்புறம் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் சுப்பிரமணியர் கோவிலின் மகரமண்டபம் ஆஸ்தான மண்டபம் முதலிய எல்லா மண்டபங்களும் உத்தரமாற நாடார்களால் சில நூறு வருடங்களுக்கு முன் சுமார் 10 லட்ச ரூபாய் செலவில் மிக அலங்காரமாகக் கட்டி வைத்திருப்பதும் அல்லாமல், அதன் ரிப்பேர், தளவரிசை, முன் அலங்காரம் முதலியவை ஒரு லட்ச ரூபாய் செலவில் அவர்களாலேயே செய்து வைக்கப்பட்டன. அதுபோக மேற்படி கோவிலின் பங்குனி உற்சவத் தேரும் செய்து கொடுக்கப்பட்டது. மேலும் மேற்படி கோவிலில் நிகழும் சுப்பிரமணியருக்கு நடக்கும் அர்த்தசாமக் கட்டளை பரம்பரையாயாய் மேற்படி நாடார்களின் செலவில் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி நித்திய அர்ச்சனைக்கு வேண்டிய புஷ்பங்களுக்கான நந்தவனங்களும் பாலுக்கான பசுக்களும் அவர்கள் செலவிலேயே பரிபாலித்துக் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதுவும் அன்றி மேற்படி கோவிலின் ஆஸ்தான மண்டபத்தில் இருக்கிற திருவாட்சிக்குரிய நித்திய தீபார்ச்சனை மாதாந்திரமும், மற்ற உற்சவகாலங்களிலும் சுப்ரமணியர் கோவிலைச் சுற்றிவரும் போது நடக்கும் தட்டி, திருக்கண், தீபார்ச்சனை செலவுகளும் மேற்படி நாடார்களால் நடந்து வருகிறது. ஐப்பசி மாதம் நடக்கும் கந்தர் சஷ்டி உற்சவத்தில் ஒரு மண்டபப்படியும் நாடார்களால் நடத்தப்பட்டு வருகிறது. மேற்படி கோவிலின் விசேஷங்களின் போது திருப்பரங்குன்றம் போகும் நாடார்கள் உண்டு பண்ணி வசதிக்காக அங்கே அநேக மண்டபங்கள், மடங்கள் முதலானவைகளை நாடார்கள் பரிபாலித்து வருகின்றனர். இவ்விதம் நாடார்கள் உரிமை பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் ஆலயத்துக்கு பெரியமுத்து நாடார் மாதந்தோறும் சென்றும் விசேஷ காலங்களில் தங்கி இருந்தும் பல திருப்பணிகள் செய்து வந்திருக்கின்றார். அவர் சாலிச்சந்தையில் இருக்கும்போது சாப்பிடுவது திருப்பரங்குன்றம் சந்நாசி கிணற்று நீர், மாற்றாள்கள் வைத்து காவடியில் கொண்டு வந்து சேரும்படி செய்து அருந்துவார்.
பெரியமுத்து நாடார் சாலிச்சந்தை, பேரையூர் ஆகிய ஊர்களில் பிரஸ்தாபமாய் இருந்தது மட்டும் அன்றி, சிவகாசியில் தங்கள் ஆதிமனையையும் இருப்பிடமாகக் கொண்டு வந்தனர். இதனால் ஆறூர் உறவின்முறையில் சிவகாசி உறவின்முறையும் ஒன்றாக எண்ணப்பட்டு வந்தது. கிராமங்களில் நாடார்கள் கல்யாணங்களில் பல்லாக்கு ஏறுவதை மற்றக்குடிகள் அனுமதிக்காத அக்காலங்களில் சிவகாசியிலும், சாலிச்சந்தையிலும் நாடார்கள் பல்லக்கேறி கல்யாணம் நடத்தி பெண் மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு போவார்கள்.
குடும்ப காரியங்கள்
பெரியமுத்து நாடார் சிவகாசியில் முன்பு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்திருக்கிறார் என்று சொல்லி இருக்கிறோம். அந்த அம்மாளிடம் தொந்தியப்ப நாடார் அல்லது சீனியப்ப நாடார் என்ற புதல்வர் உதித்தனர். பாலனைத் தந்த மாது பரமபதம் அடைந்து விட்டார். பின்பு மருதம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். மருதம்மாளுக்கு வேல்முருக நாடார், கருணையானந்த சுவாமி என்றைக்கப்படும் அணைஞ்ச பெருமாள் நாடார் ஆகிய இரு புதல்வர் உதித்தனர்.
பெரியமுத்து நாடாரின் சகோதரர்கள் அய்யம்பெருமாள் நாடார், மாரிமுத்து நாடார் , ராமநாத நாடார், சுப்பய நாடார், காளியப்ப நாடார், சங்கர நாடார் ஆகிய ஆறுவர்கள் திருமணம் முன்னும் பின்னுமாக இக்காலத்தில் நடைபெற்றன. விளை நிலங்கள் வியாபார விருத்திப் பொருட்கள் விரிவு காட்டியதால் சகோதரர்களிடம் வேற்றுமைகள் காணவுமாயிற்று சகோதரர் அறுவரில் கடைக்குட்டி சங்கர நாடார் தமையன் செய்கைகளுக்கு மாறுபட்டிருந்தார். தம்பிமார்களில் ஒருவராகிய மாரிமுத்து நாடார் மகன் சங்கரலிங்க நாடார் அவர் மகள் அழகம்மாள். அந்தப் பெண்ணுக்கு சிவகாசியில் ஒரு தனவந்த நாடாரின் புதல்வனை மணக்க கல்யாணம் ஏற்பாடாயிற்று. இது தெரிந்த சங்கரலிங்க நாடார் தமையன்மார் சம்மதமின்றி அக்கல்யாணத்திற்கு எதிர்ப்பான்மையாக தன் மகனுக்கு விருதுபட்டியில் அதே முகூர்த்தத்தில் விவாகம் செய்ய நிச்சயித்து அதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். இந்த ஏற்பாடு பெரியமுத்து நாடாருக்கு பிடிக்கவில்லையாயினும் விருதுபட்டி நாடார்கள் தங்களுடன் அம்மாபேட்டையில் நடந்த வியாபார விவகாரங்களால் தடங்கள் செய்யக்கூடும் என்று ஒருவர் மூலம் தம்பிக்கு சொல்லி அனுப்பினார். சங்கர நாடார் கேட்கவில்லை. பெரியமுத்து நாடார் தன் தம்பி பேத்தி அழகம்மாள் கல்யாணத்திற்கு சகல பொருட்கள் ஜனங்களுடன் சிவகாசி சென்று கல்யாணம் வெகு விமரிசையாய் நடக்கலாயிற்று. பலவகை பொறியல்கறிகள், பருப்பு, நெய், பாயாசம், கனி வகைகளுடன் படைக்கப்படுவதாகிய அன்னப்பந்தி ஊரடங்க நடத்தப்பட்டது. பந்தியில் வந்து சாப்பிட்டவர்கள் நெற்றியில் குங்குமம் அணிய வேண்டும் என்பதான ஒர் நியதியையும் பெரியமுத்து நாடார் செய்தார். சந்தனம், வெற்றிலை பாக்கு மிகு திருப்தியாய் வழங்கலாயிற்று. அது சமயம் தம்பி சங்கர நாடார் விருதுபட்டி உறவின்முறை அம்மாபேட்டை விவகாரத்து முன்னிட்டு தன் மகன் கல்யாணத்தை தடைசெய்துவிட்டனர் என்று அண்ணாச்சியிடம் வந்து சொல்லி நின்றனர். தம்பி வார்த்தையைக் கேட்ட தமையன் அபிமானமும் சீற்றமும் உண்டாக அஞ்சாதே என்று அன்னமருந்தச் செய்து அழகம்மாள் கல்யாணம் நிறைவேறியவுடன் அடுத்த முகூர்த்தத்தைக் குறிப்பிட்டு சிவகாசியிலிருந்து ஜனங்களும், பல்லக்கும், பரிகாரியும், குருக்களும் புறப்படும்படி செய்து பல வண்டிகள் முன்பின் வர தாம் பல்லாக்கு வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். பெரியமுத்து நாடார் வரும் செய்தியைத் தெரிந்த கொண்ட விருதுபட்டி நாடார்கள், பாண்டிய நாட்டு நாடார்களில் மிக பிரபுவாய் விளங்கும் பெரியமுத்து நாடார் பகையை நாம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று மிக விமரிசையுடன் புறப்பட்டு மலைக்குட்டி ஊரணி வரை எதிர் சென்று ஒருவர்க்கொருவர் முகமன் கூறி உள்ளத்து துவேஷங்களை மாற்றி யாவரும் ஒரு வழிப்பட்டு நகரத்தில் சென்று கல்யாண வைபவத்தை மிக்க சிறப்புடன் நடத்தினர். பெரியமுத்து நாடார் சிவகாசியில் செய்து கொண்டபடி விருதுநகரில் பந்தியருந்திய ஜனங்கள் குங்குமம் இடும்படி செய்து கொண்டனர்.
பெரிய முத்து நாடார் அந்திம காலம்
பெரியமுத்து நடார் அணைஞ்ச பெருமாள் நாடார் என்ற கருணையானந்த சுவாமிகள் பிறந்தார். அவருடைய வரலாறு தனியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கருணையானந்தரின் திருமணத்திற்கு பின் பெரியமுத்து நாடார் குடும்பம் பாகப்பிரிவினை ஆயிற்று. ஏழு சகோதரர்களுள் ஒருவராகிய சுப்பய நாடாருக்கு சந்ததி இல்லாதிருந்தால் சொத்துக்கள் ஆறு பாகமாக்கப்பட்டன. சாலிச்சந்தைக்கு மேல்புரமுள்ள சுமார் நான்கு ஏக்கர் கொண்ட புளியந்தோப்பு மாத்திரம் இந்த ஆறு பேருக்கும் பொதுவாக இருக்கும்படி செய்து கொண்டனர். ஆறு பேரில் ஒருவராகிய மாரிமுத்து நாடார் பேரில் பட்டாவாக இருந்து பின்னர் அவர் வாரிசுகள் குழந்தைவேல் நாடார், பொன்னப்ப நாடார் முதலயவர்களுக்கு மாறி கடைசியில் பொன்னப்ப நாடார் மனைவி குருவம்மாள் பேருக்கு மாற்றப்பட்டு தற்காலம் அவர்கள் பேருக்கே இருந்து வருகிறது. பேரையூர் பேட்டையை சாலிச்சந்தை நாடார்கள் உறவின்முறைக்கு மனப்பூர்வமாய் மாற்றிக் கொடுத்து விட்டனர்.
கி.பி. 1835-40 ஆகிய இக்காலம் பெரியமுத்து நாடார் அந்திய காலம் சமீபத்தது, சகோதரர்கள், புத்திரர்கள், புத்திரிகள், பௌத்திரர்கள், தௌத்திரர்கள் பெருக்குகளால் விளங்கினர். மொத்தத்தில் அக்குடும்பம் ஒரு ஜமீன் போல் விளங்கியது. ஈஸ்ட் இண்டியாக் கம்பெனியின் அரசியில் திட்டமும் ஏற்பட்டு ஜனங்கள் சஞ்சலமின்றி வாழ்ந்தனர். பெரியமுத்து நாடார் தமது 96ம் வயதில் இகலோகம் நீத்துப் பரலோகம் எய்தினர். உயிர் நீத்த உடலெழுச்சி மிக கொண்டாட்டமாய் நடைபெற்றது. மனைவில் இருந்து மயானம் வரை பந்தல் இடப்பட்டன. ஜமீன்கள், பிரபுக்கள், உத்தியோகஸ்தர்கள் வந்தனர். விருதுநகர், சிவகாசி முதலிய ஆறூர் உறவின்முறையையும் வந்தன. பொன், வெள்ளிகளால் அரிசிகள் செய்தது வாய்க்கரிசி இட்டதாகச் சொல்வார்கள் சந்தனக் கட்டையால் அவர் உடல் தடுக்கப்பட்டது. மறுநாள் நடந்த தீ ஆத்தலில் 12 குடம் பசும்பால் விட்டு அச்சடங்கு செய்ததாகவும் சொல்வார்கள். பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் சாப்பிடும்படியாக அன்னம், கறிகள் பரிமாற்றப்பட்டன.

ஆதி அணைஞ்ச பெருமாள் நாடார் மைந்தர்கள் எழுவர்
பெரியமுத்துநாடார் மைந்தர்கள் மூவர்
மாரிமுத்து நாடார் மைந்தர்கள் மூவர்
ராமநாத நாடார் மைந்தர் ஒருவர்
காளியப்ப நாடார் மைந்தர்கள் மூவர்
சங்கர நாடார் மைந்தர் ஒருவர்
கருணையானந்த நாடார் மைந்தர்கள் ஐவர்
இவர்கள் சந்ததிகள் பெருகி தற்காலம் தேனி, கம்பம், வண்டப்புளி, உசிம்பட்டி, ஆண்டிப்பட்டி, கன்னியம்பட்டி, சாலிச்சந்தை, திருமங்கலம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருப்பூர், உடுமலைப்பேட்டை, விருத்தாச்சலம், சிதம்பரம், சென்னை , யாழ்ப்பாணம் முதலிய இடங்களிலும், வெளிநாடுகளிலும், புத்திர, பௌத்திரர்களுடன் வேளாண்மை , வியாபார, உத்தியோக விருத்தியுடன் விளங்கி வருகின்றனர்.
நன்றி ஐயா
ReplyDelete