ஸ்ரீ குமரவிடங்க அய்யனார்

மைக்கண் நாடான் குடியிருப்பு ஸ்ரீ குமரவிடங்க அய்யனார் கோவில் வரலாறு


ஆதி அணைஞ்ச பெருமாள் நாடார் வம்ச குலதெய்வமாகிய ஸ்ரீ குமரவிடங்க அய்யனார் திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம், சுகந்தலை ஊராட்சி, மைக்ககண் நாடான் குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கத்தில் உள்ள குரும்பூரில் இருந்து சுமார் 2 கி.மீ அரத்திலும், தூத்துக்குடி - திருச்செந்தூர் மார்க்கத்தில் ஆத்தூருக்கு அடுத்தாற்போல் பேருந்துகள் ஐயன் கோவில் என்ற நிறுத்தத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் நமது கோவில் அமைந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து ஏரல் செல்லும் பேருந்துகள் சில நமது கோவில் வழியாகச் செல்கிறது.
குலதெய்வம் அருள்மிகு குமரவிடங்க அய்யனார் திருத்தலம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்தலம் என்று கிராமத்து பெரியவர்கள் கூறுகிறார்கள். நமது முன்னோர்கள் இந்தக் கோவில் உந்து சாமி கும்பிட்டு, சில காரியங்கள் செய்ய இந்தக் கோவிலில் உத்தரவு கேட்டு அதன்படி செய்திருக்கிறார்கள் என்பதனை நமது பங்காளிகள் வரலாற்றில் காணலாம். 1918க்குப் பிறகு நமது முன்னோர்கள் குலதெய்வம் கும்பிடுவதை நிறுத்திவிட்டார்கள். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் நமது முன்னோர்கள் தம் பெரியவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இந்த ஸ்தலத்தைக் கண்டுபிடித்தார்கள். அந்த நேரத்தில் பயங்கரமான உடைமரம், பாம்பு புற்றுகளுக்கு நடுவில் இப்போது இருக்கின்ற அதே நிலையில் டேம் இருந்ததாகவும், அதை சுத்தம் செய்து பீடத்திற்குள் ஓர் ஆள் செல்கின்ற அளவிற்கு செப்பனிட்டதாவும் சொல்லப்படுகிறது. நாளாவட்டத்தில் இந்தக் கோவிலின் சுற்றுப் புறங்களைச் சுத்தம் செய்து, இன்று காணப்படுகிற கோட்டை மதிலை, தூத்துக்குடியைச் சேர்ந்து திரு. அ.சிவாபாண்டி நாடார் தலைமையில் உள்ளூர் பிரமுகர்கள் தங்கப்பாண்டி நாடார், பாண்டிப்ழ நாடார் அவர்கள் உதவியுடன் கட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதன்பிறகு சங்கிலி கருப்பன் சிலை நிறுவப்பட்டது. உசிலம்பட்டி அய்யநாடார் வாரிசுகள் பைரவர்கள் சிலையை நிறுவினார்கள். பீடத்தின் முன்னால் சுவாமி கும்பிடுவதற்கு வசதியாக கூரை போடப்பட்டுள்ளது. கோவிலில் சிவராத்திரி அன்று ஒவ்வொரு வருடமும் சாமி கும்பிடும் போது நமது பள்ளிகள் தங்குவதற்காக வசதி செய்யபட்டுள்ளது. -
இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டபோது பீடத்தில் எந்த ஒரு மாறுதலும் செய்ய சுவாமி உத்தரவு கிடைக்கவில்லை. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண் கலசத்தை மாறி செம்பு கலசம் போடவும் சுவாமி சுத்தரவு கிடைக்கவில்லை .
- 5.6.1998 அன்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகள் கழித்து 9.2.11 புதன்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அய்யன் கோயிலை புனரமைப்பு செய்து புதியனகாகக் கட்டுவதற்கு அய்யன் உத்தரவு கொடுத்ததின் பேரில் நமது பங்காளிகளும், உள்ளூர் மக்களும் மற்றோரும் சேர்ந்து புதிய கோயில் ஸ்தாபித்து திருக்கோயில் அழகுற கம்பீரத்துடன் இருக்கிறது.
சுற்றுவட்டாரத்தில் உள்ள அய்யனார் சுவாமிகளுக்கு மாறுபட்டு ரீகுமர விடங்க அய்யனார் முனிவர் தவத் கோலத்தில் காட்சி அளிக்கிறார். திருச்செந்தூர் கோயிலிலும் ஸ்ரீ குமார விடங்க அய்யன் காவல் தெய்வமாக விற்றிருக்கின்றார். சங்கிலிக் கருப்பனுக்கும் மண்டபம் கட்டுப்பட்டு அழகு செய்யப்பட்டுள்ளது. கோயிலின் சுற்றுப்பிரகாரத்தின் தெற்கில் தட்சிணாமூர்த்தி, வடக்கில் அன்னபூரணி, மேற்கில் குமாரலிங்கம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்திற்கு பக்தர்கள் திரளாக வந்து அய்யனின் அருள் பெற்றனர்.
சாமி கும்பிடும்போது பங்காளிகள் வசதியாக தங்கும் பொருட்டு மண்டபம் கட்ட திட்டமிட்டிருந்தோம், அதற்காக கோயிலின் அருகில் இடம் வாங்கியுள்ளோம்.
அய்யனின் அருள் நம் பங்காளிகள் அனைவருக்கும் கிட்டுவதாமே! வருடந்தோறும் பங்காளிகள் அனைவரும் தம் பெண் மக்களுடன் சிவராத்திரி அன்று வந்து சாமி கும்பிட்டு அய்யனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


Comments

Popular posts from this blog

ஆதி அணைஞ்ச பெருமாள் நாடார் வம்ச வரலாறு

ஸ்ரீ கருணையானந்த சுவாமிகள் வரலாறு