ஸ்ரீ கருணையானந்த சுவாமிகள் வரலாறு

ஸ்ரீ கருணையானந்த சுவாமிகள் வரலாறு ஸ்ரீ பெரியமுத்து நாடாருக்கு அணைஞ்சபெருமாள் நாடார் என்ற கருணையானந்த சுவாமிகள் பிறந்தார். மங்கல்ரேவில் யோகிபுருடனின் வாக்கியப் பலிதமே என்று எண்ணலானார். மிக்க லட்சணமும், நல்ல தேஜஸும், அருள் அமைந்த கண்களும் அமையப்பெற்று பார்ப்போர் உள்ளம் கவரும் தோற்றத்துடன் விளங்கிய கருணையானந்தத்தின் திருமுக நிலா விலாசம் தாய், தந்தையரின் அகத்தின் கண்ணின்று எழும் ஆனந்தக் கடலைப் பொங்கித் ததும்பும்படி செய்தது. கருணையானந்தர் தமது தந்தையாரின் அகண்ட ஐஸ்வர்யப் பெருமையில் வளர்ந்து வருவதாயினர். சிறு தேருருட்டி தெருவில் நடை பயின்று சிறுவருடன் ஓடி விளையாடி வளர்ந்து வரும் பருவம் ஐந்து அடைந்தபின் சிறுவருடன் பாடசாலை சென்று படித்து வந்தார். நற்குணமும், தெய்வ பக்தியும், அடக்கவொடுக்கமும் அவரிடம் இயல்பாகவே வளர்ந்து வந்தன. சுமார் 12 வயதுக்குள் கற்க வேண்டியவைகளைக் கற்று தமது குலத்தொழிலாகிய வியாபார முயற்சிப் பழக்கச் சிற்றாள் முறையில் பேரையூர் கடை சென்று தொழில் பார்த்து வந்தார். சித்தர் தரிசனம் கருணையனந்தர் தம் 13வது வயதில் ஒரு நாள் கடையிலிருந்து மாலை வேளையில் சாலிசந்தைக்கு வந்து கொண்டிருக்கு...